வரும் 27, 28ம் தேதிகளில் தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:- 24-02-2023 முதல் 26-02-2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
27-02-2023 முதல் 28-02-2023 வரை தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினக்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது