டுவிட்டர் நிறுவன ஊழியரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்

உலக அளவில் பிரபலமான சமூக வலைதளங்களில் ட்விட்டரும் ஒன்று. இதை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வலைதளத்தை டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவருமான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார்.

இத்தளத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய பிறகு, அதில் அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார். அதில் ஆட்குறைப்பு நடவடிக்கையும் அடங்கும். அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுமார் 200 ஊழியர்களை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்திருந்தார். அதில் கணினி பொறியாளர்கள், மேலாளர்கள், கணினி வல்லுநர்கள், உதவியாளர்களும் அடக்கம். பணிநீக்கம் செய்யப்பட்ட பலரும் எலான் மஸ்க்கையும், அவரது நிறுவனத்தையும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், டுவிட்டரின் மாற்றுத்திறனாளி ஊழியரொருவர் தான் பணியில் நீடிக்கிறேனா இல்லையா என்பதை தெளிவுபடுத்துமாறு போட்ட டுவீட்டிற்கு அவரது மாற்றுத்திறனை சுட்டிக்காட்டிய எலான் மஸ்க், அதனால் அவர் பணிசெய்யவில்லையென குறிப்பிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார் எலான் மஸ்க். தனது மன்னிப்பில் ஹல்லியின் நிலைமையை நான் தவறாகப்புரிந்து கொண்டதற்காக, நான் அவரிடம் மன்னிப்புக்கேட்க விரும்புகிறேன். அவர் டுவிட்டரில் நீடிப்பது குறித்து ஆலோசித்து வருகிறேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

77 + = 81