
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், கவரப்பேட்டை அருகே பெருவாயல் பகுதியில் டி.ஜெ.எஸ்.பப்ளிக்பள்ளி (சி.பி.எஸ்.இ) இயங்கி வருகிறது.இப்பள்ளியில் யோகா பயிலும் 175 மாணவர்களின் உலக சாதனை நிகழ்ச்சியாக சிவானந்தா யோகாலயா சார்பில் நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் 175 மாணவ, மாணவியர் தொடர்ந்து ஐந்து நிமிடம்,40 விநாடிகள் பர்வதாசனம் எனும் யோகாசனத்தில் நின்று உலக சாதனை படைத்தனர்.இந்த சாதனை ‛இன்டர்நேஷனல் யோகா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்தது.

இன்டர்நேஷனல் யோகா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ தீர்ப்பாளர் சிந்துஜா வினித் இதனை பார்வையிட்டு பதிவு செய்தார்.இதன் பின்னர், மாணவர்களுக்கு உலக சாதனை பட்டயங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் டி.ஜெ.எஸ்.கல்வி குழும தலைவருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். முன்னதாக அனைவரையும் பள்ளியில் தாளாளர் டி.ஜெ.எஸ்.ஜி.தமிழரசன் வரவேற்றார். இதில்,சிறப்பு அழைப்பாளராக வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கான உலக சாதனை பட்டயங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்புரையாற்றி பேசினார்.
இந்நிகழ்ச்சியில்,நிர்வாக இயக்குனரும், செயலாளருமான டி.ஜெ.ஆறுமுகம், துணைத்தலைவர் டி.ஜெ.தேசமுத்து, இயக்குனர்கள் டாக்டர் பழனி, விஜயகுமார்,கபிலன்,தினேஷ், உறுப்பினர்கள் சண்முகசுந்தரம்,ஜெயக்குமார், ராஜேஷ்,நிர்வாக அலுவலர் ஏழுமலை,முதல்வர்கள் அசோக்,டாக்டர்பிரகாஷ், பிச்சைமணி,டாக்டர்லட்சுமிபதி,ஞானபிரகாசம்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் ரமேஷ்,எம்.எல்.ரவி,பேரூர் செயலாளர்கள் முத்து, அறிவழகன்,துணை தலைவர் கேசவன்,மாணவர்களின் பெற்றோர்கள்,இருபால் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில்,யோகா பயிற்சியாளர் சந்தியா நன்றி கூறினார்.