டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் வரும் 66 காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி நடந்தது. இந்த தேர்வை 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவு கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு, முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது. அதன்படி, முதன்மை தேர்வுக்கு 3 ஆயிரத்து 800 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கான முதன்மை தேர்வு மார்ச் மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த நிலையில் 66 காலி பணியிடங்களுக்கு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகளை இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகள் https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 137 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். ஜூலை 13,14,15 ஆகிய தேதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 4 =