திண்டுக்கல் மாவட்டத்தில் புதியதாக அரசு மதுபான கடை திறப்பதை கண்டித்து குட்டத்துப்பட்டி கிராம மக்கள் கொட்டும் மழையில் ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குட்டத்துப்பட்டி அன்னை நகருக்கும் பெரியார் நகருக்கும் இடைபட்ட பகுதியில் மாவட்ட நிர்வாகத்தால் புதியதாக அரசு மதுபான கடை திறப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இப்பகுதி பொதுமக்கள் தங்களது பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை தேவை இல்லை எனவும் ஏற்கனவே இப்பகுதி மக்கள் அனைவரும் மக்காச்சோலம், முருங்கை உள்ளிட்ட விவசாயத்தை இழந்து வெளியில் பணிகளுக்கு சென்று வரும் சூழலில். அரசு மதுபானக்கடை திறந்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். அதேபோல் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு மதுபான பிரியர்களால் பாதிப்பும் ஏற்படும் ஆகவே எங்களது பகுதியில் மதுபானக்கடை தேவையில்லை என காலை 8 மணி முதல் கொட்டும் மழையில் நனைந்து கொண்டு குட்டத்துப்பட்டி, இந்திரா நகர், அன்னை நகர், பெரியார் நகர் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது பேருந்துகளும் சிறை பிடிக்கப் பட்டது அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது பெயரில் தற்பொழுது போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
