டாக்டர் முத்துலெட்சுமிரெட்டிக்கு புதுக்கோட்டையில் சிலை
சிபிஎம் வரவேற்பு

இந்தியாவில் படித்த முதல் பெண் மருத்துவரும், தமிழக சட்டமன்றத்தின் முதல் பெண் உறுப்பினருமான டாக்டர் முத்துலெட்சுமிரெட்டிக்கு புதுக்கோட்டை நகரில் சிலை நிறுவப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டி வரவேற்றுள்ளது.

இதுகுறித்து கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கை: மிகச்சிறந்த சமூக, பெண் விடுதலைப் போராளியான டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி இந்தியாவில் படித்த முதல் பெண் மருத்துவர் என்ற பெயரைப் பெற்றவர். தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் பெண் உறுப்பினர். சென்னை அடையாறில் உலகப் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவமனையை நிறுவி மருத்துவ உலகில் மிகப்பெறும் சாதனையை படைத்தவர்.

இத்தகைய பெருமைமிக்க டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி புதுக்கோட்டையில் பிறந்தவர். பெண்கள் கல்வி கற்க முடியாத காலத்தில் அதை உடைத்தெறிந்து சாதனை படைத்தவர். அவருக்கு புதுக்கோட்டையில் நகரில் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாட்டக்குழு பாராட்டி வரவேற்கிறது.மேலும், புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு டாக்டர் முத்துலெட்சுமி பெயரை வைக்க வேண்டும். அவரது நினைவாக மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளர்.