ஜெய்ப்பூரில் ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற டிரைவர் பணி நீக்கம்

ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற வீடியோ வைரலானதையடுத்து டிரைவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து தவுசாவுக்கு ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச்சென்ற தவுசா அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் டிரைவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தவுசா அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி ஷிவ்ராம் மீனா கூறியதாவது, தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட அந்த ஆம்புலன்ஸ் டிரைவரை நாங்கள் நீக்கிவிட்டோம்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழுவையும் அமைத்துள்ளோம். இது தொடர்பாக குழு அறிக்கை சமர்ப்பித்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். இது ஒரு தீவிரமான விஷயம். இன்று (வியாழக்கிழமை) காலையில் தான் இது என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

85 + = 93