ஜெயலலிதாவின் வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டது செல்லாது என்று நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அரசின் அட்வகேட் ஜெனரலிடம் ஆலோசனை பெற்று அடுத்த கட்ட முடிவு : அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறைக்கைதிகள் சிகிச்சை பெறுவதற்கான தனி வார்டு அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.அந்த வார்டை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து அங்கே ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்:

தமிழகத்தில் மற்றவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை போல் சிறைக்கைதிகளுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  தனி வார்டு திறக்கப்பட்டுள்ளது,ஏற்கனவே இதே போல் பல மருத்துவமனைகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது,ஜெலலிதாவின்  வேதா நிலையம் அரசுடமையாக்கப்பட்டது செல்லாது  என்ற நீதிமன்ற தீர்ப்பு குறித்து இவ்வழக்கில் ஆஜரான அட்வகேட் ஜெனரலின் ஆலோசனையைப் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை சிறைச்சாலையில் ஊழல் புகார் குறித்து தொடுக்கப்பட்ட வழக்கிற்கு  எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிபதி கூறியதால் வழக்கைத் தொடுத்தவர்களே அதனை வாபஸ் பெற்று உள்ளார்,முழுமையான விபரங்களை கொடுத்தால் அதன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,எங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடு என்பது எல்லாருக்கும் தெரியும்,அந்தளவு முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை,அப்படி இருந்தால் லஞ்ச ஒழிப்புத் துறை உரிய நடவடிக்கை எடுக்கும்,
சிறைச்சாலைகளில் மத்திய,மாநில அரசுகளின் தணிக்கை குழு மூலம்  ஆய்வு நடத்தப்பட்டுதான் வருகிறது,தவறு செய்யும் இளம் சிறார்களை திருத்த இயன்ற அளவு சிறார் சீர்திருத்த பள்ளிகளில் சிறப்பு பயிற்சி தரப்படுகிறது,சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பி செல்லும் சிறுவர்களை கண்டுபிடித்து விடுகிறோம்,அவர்கள் தப்பி செல்லாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். இவ்விழாவில் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 3 = 8