ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் பெ. ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட மேலக்குடியிருப்பு நடுநிலைப்பள்ளியில், கல்வி பயிலும் 76 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆறுமுகம், ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவர் சுமதி, நகராட்சி ஆணையர் மூர்த்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, வருவாய்  கோட்டாட்சியர் .பரிமளம், ஜெயங்கொண்டம் தாசில்தார் துறை, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம், நகர்மன்ற உறுப்பினர் அம்பிகாபதி, ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

54 + = 62