ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரத்தில் திமுக கொடியேற்று விழா நடைபெற்றது.
இது பற்றி ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வெளியிட்ட செய்தி குறிப்பில், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட, செங்குந்தபுரம் 1 மற்றும் 11-வது வார்டு திமுக கிளை கழகத்தின் சார்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக கொடியேற்றும் நிகழ்ச்சி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் இராமகிருஷ்ணன் தலைமையிலும், நகர அவைத்தலைவர் ஏகாம்பரம், கண்ணன், கொளஞ்சி, சுரேஷ் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு திமுக கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் நகர செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான கருணாநிதி, மாவட்ட துணைச்செயலாளர் கணேசன், நகர்மன்ற உறுப்பினர் இராஜமாணிக்கம் பிள்ளை மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக வார்டு செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.