அரியலூர் ஜெயங்கொண்டத்தில், வருகிற 28ஆம் தேதி நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இது பற்றி அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:
அரியலூர் மாவட்ட நிர்வாகத்துடன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையம் இணைந்து, ஜெயங்கொண்டம் அருகே, மகிமைபுரம் மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில்,
28- 1- 2023 அன்று நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான, பணிகள் குறித்த முன்னேற்பாடு கூட்டம், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி , மாவட்ட வேலை அலுவலர் அ.கலைசெல்வன் , இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மூ.வினோத் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Home சிறப்பு செய்திகள் ஜெயங்கொண்டத்தில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாகஅரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்