ஜம்மு- காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 11 பேர் பலி

ஜம்மு- காஷ்மீரின் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இருந்து கலி மைதான் என்ற பகுதி நோக்கி இன்று காலை பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் 36 பேர் பயணித்தனர். சாஜியன் பகுதியில் உள்ள மலைப்பாங்கான பிராரி நல்ஹா என்ற பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிபாராத விதமாக பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு, விரைந்து சென்ற போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் 25 பேர் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்‍கு, ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 5