ஜம்முவில் பெண்னை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி வெவ்வேறு இடங்களில் புதைத்த நபர் கைது

ஜம்மு காஷ்மீரில் பெண்னை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி வெவ்வேறு இடங்களில் புதைத்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மத்திய காஷ்மீரின் சோய்புக் பகுதியை சேர்ந்த தன்வீர் அகமத் கான் என்பவர், பயிற்சி வகுப்புக்கு சென்ற தன் 30 வயது சகோதரியை காணவில்லை என சோய்புக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல் துறையினர், மொகந்த்பொரா புட்காம் பகுதியை சேர்ந்த ஷபீர் அகமது வானி(45) உள்ளிட்ட சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஷபீர் அகமது வானி என்பவர் பெண்ணை கொலை செய்தது தெரியவந்தது.

அவரிடம் காவல் துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் காணாமல் போனதாக கூறப்பட்ட பெண்ணை கொலை செய்து, உடல் பாகங்களை வெட்டி வெவ்வேறு இடங்களில் புதைத்ததை ஒப்பு கொண்டார். இதையடுத்து, பெண்ணின் உடல் பாகங்களை எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது உறவினரை திருமணம் செய்த மறுத்ததால் அந்த பெண்ணை அவர் கொலை செய்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெண்னை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி வெவ்வேறு இடங்களில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 1 =