தி.மு.க., இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், சோழவரம் வடக்கு ஒன்றியத்தில் தொடர் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
சோழவரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட 162 கிளைகளிலும் கட்சிக்கொடி ஏற்றி இனிப்பு வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், சின்னம்பேடு ஊராட்சியில் கபடி போட்டி தொடக்க விழா நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் மற்றும் சோழவரம் வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சந்திரசேகர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போட்டியை, ஒன்றிய செயலாளர் வழுதிகை செல்வசேகரன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின்போது, ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி ராணி ராஜா, துணைத் தலைவர் சேகர், ஒன்றிய அவைத் தலைவர் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர். தொடர்ந்து, பஞ்செட்டி ஊராட்சி, தச்சூர் கூட்டுச்சாலையில், கட்சிக் கொடியேற்றி, இனிப்பு வழங்கி 500க்கும் அதிகமானோருக்கு வழுதிகை செல்வ சேகரன் மதிய உணவு வழங்கினார்.
ஒன்றிய கவுன்சிலர் ரவி மற்றும் கலைவாணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஊராட்சி செயலாளர் செபாஸ்டின் உடனிருந்தார். பின்னர், மாதவரம் ஊராட்சியில் சுரேஷ் ஏற்பாட்டில் 200 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவாக, மாதவரம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலம்மாள் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர், துப்புரவு பணியாளர்களுக்கு தலா 25 கிலோ அரிசி மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. கிளைச் செயலாளர் மாதவரம் பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், தி.மு.க., ஐ.டி.,விங் மணிகண்டன், ஒன்றிய மாணவர் அணியைச் சேர்ந்த கதிரவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், ஒன்றிய செயலாளர் வழுதிகை செல்வசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.