கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் சொத்துவரி, பால் விலை, மின் கட்டணம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மாணவர்களிடையே கஞ்சா மற்றும் போதைப் பழக்கம் அதிகரிப்பு உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்த கோரியும், கட்டுப்படுத்த தவறிய தி.மு.க., அரசை கண்டித்தும், அ.தி.மு.க., சார்பில் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் துரை தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., செயலாளருமான குமரகுரு கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழக அரசை கண்டித்து, தி.மு.க., ஆட்சியில் தொடர்ந்து சொத்து வரி, பால் விலை, மின் கட்டணம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் மாணவர்களிடையே அதிகரிப்பு இவற்றை கட்டுப்படுத்தாமல், தவறிய அரசு தான் தி.மு.க., அரசு. உளுந்தூர்பேட்டை நகராட்சியில் அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை செயல்படுத்தாமல் முடக்கி உள்ளனர். தற்போது 100 மடங்கு சொத்து வரி உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சி தான் தி.மு.க., ஆட்சி என குற்றம் சாட்டினார்.
ஆர்ப்பாட்டத்தில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமார், மாவட்ட அவைதலைவர் பச்சையப்பிள்ளை, மாநில சர்க்கரை இணைய தலைவர் ராஜசேகர், முன்னாள் எம்.பி., காமராஜ், ஒன்றிய செயலாளர் மணிராஜ், திருநாவலூர் ஒன்றிய செயலாளர்கள் செண்பகவேல், சந்திரன், திருவெண்ணைநல்லூர் ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் சாய்ராம், நகர மன்ற உறுப்பினர்கள் தேசிங்குராஜா, ராஜா மற்றும் வழக்கறிஞர் திலீப், லயன் வெங்கடேசன், நகர துணை செயலாளர் கோபால், தகவல் தொழில்நுட்ப பிரிவு சாய்அருன், முருகன், கோபால் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.