செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜுலை 28-ந் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை நடக்க விருக்கிறது. இதில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனா். இந்நிலையில், மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள், தொடக்க விழா நிகழ்வுகள், விளம்பரம், வரவேற்பு, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் தலைமைச் செயலாளர் இறையண்பு, அமைச்சர் மெய்யநாதன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அபூர்வா, சிறப்பு அலுவலர் தரேஸ் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

66 − = 56