செவ்வாய் கிரகத்திற்கு மீண்டும் செயற்கை கோள் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

காரைக்காலை அடுத்த உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிக்கிழமையான இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட நேரம் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தனது குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக சனீஸ்வர பகவான் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் சிவன் கூறுகையில், செவ்வாய் கிரகத்திற்கு மீண்டும் செயற்கை கோள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ளி உள்ளிட்ட வேறு கிரகங்களுக்கும் செயற்கை கோள்களை அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சந்திராயன் செயற்கைகோளை மீண்டும் விண்ணில் ஏவுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் நல்லபடியாக முடிய தற்போதைய அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 2 =