செம்மரம் கடத்திய வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் கைது

2கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் தமிழகத்தை சேர்ந்த 13 பேரை கைது செய்தனர்.

ஆந்திரா மாநிலம், கொந்தலா செருவு சோதனை சாவடியில் போலீசார் கடந்த 4 ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி, 3 கார்களை மடக்கினர். ஆனால் டேங்கர் லாரியை மட்டும் நிறுத்தி விட்டு காரில் தப்பினர். சோதனையில் டேங்கர் லாரியில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 3. 5 டன் எடையில் 155 செம்மரக்கட்டைகள் இருந்தது. விசாரணையில் வேலுார், திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தமிழகம் வந்தனர். இந்நிலையில் திருப்பத்துார் மாவட்டம், புதுார்நாடை சேர்ந்த சாமிநாதன், 27, சந்தீவ், 24, வேலுார் மாவட்டம், கணியம்பாடியை சேர்ந்த விஜயகாந்த், 24, சக்திவேல் 24, விஜயகுமார், 24, வெள்ளைச்சாமி, 26, அரிமூர்த்தி, 25, உள்ளிட்ட 13 பேர்களை இன்று கைது செய்து 3 கார்களை பறிமுதல் செய்தனர்.கைதான 13 பேரும் கடப்பா சிறையில் அடைக்கப்பட்டனர்.