செப் 1 முதல் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு சூடான சத்துணவு : தமிழக அரசு உத்தரவு

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் அங்கன்வாடி மையங்களில் சூடான சத்துணவு வழங்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1 முதல் திறக்கப்படும் அங்கன்வாடி மையங்களுக்கு வரும், 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு காலை 11.30 முதல் 12.30-க்குள் சத்துணவு தரவேண்டும். காலாவதியான மற்றும் தரமற்ற பொருட்களை சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது.

அதேபோல் அங்கன்வாடி பணியாளர்கள் விரல் நகங்களில் நகப்பூச்சு மற்றும் செயற்கை நகங்களை பயன்படுத்தக் கூடாது. மூக்கை சொறிதல், தலை கோதுதல், கண், காது, வாயை தேய்த்தல் மற்றும் எச்சில் துப்புவதை தவிர்க்க வேண்டும். அனைத்து அங்கன்வாடி பணியாளர்களும், 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்

அங்கன்வாடி மையங்களுக்கு வரும் 2 முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 55 = 57