செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தகவல்

2022-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில், தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைக்க வெடிபொருள் சட்டமும், விதிகளும் (2008)- இன் கீழ், கீழ்க்கண்ட ஆவணங்களுடன் வருகிற 30&ம் தேதிக்குள் மாவட்டத்தில் அனுமதிபெற்று இயங்கி வரும் இ-&சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் பெற இம்மாதம் செப்டம்பர் 30.09.2022&க்குள் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் மனுச் செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. தேவைப்படும் ஆவணங்கள், புல நீல வரைபடம் (6 நகல்கள்), சொந்த இடம் எனில் பத்திர ஆவணங்கள் (அசல் 5 நகல்கள்), வாடகை இடம் எனில் வாடகை ஒப்பந்த பத்திர நகல். ரூ.500/&-ஐ வங்கியில் செலுத்தப்பட்ட E-Challan நகல். முகவரி (பான்கார்டு, ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஸ்மார்ட் அட்டை). நகராட்சி/ ஊராட்சி/ பேரூராட்சி வரி ரசீது. பாஸ்போர்ட் அளவு 2 புகைப்படம் ஆகும்.

மேலும், தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பங்கள் அளிக்க கடைசி நாள் 30.09.2022 (மாலை 5.45 மணிக்குள்) ஆகும். இத்தேதிக்குள்; கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். மேலும் 01.10.2022-&க்கு பின்னர் தற்காலிக பட்டாசு உரிமம் கோரிவிண்ணப்பிக்க இயலாது எனவும், மேலும் உரிய காலத்திற்குள் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரம், முன்னதாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

31 − 27 =