சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பலரிடமிருந்து 20 சவரன் நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் தலைமறைவாகிவிட்ட வடமாநில தம்பதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தாம்பரம் அடுத்த ரங்கநாதபுரம் பகுதியில் வசித்து வந்த ரோஹித் பாஜ்பேய் தான் விமான நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிவதாகவும், பணம் கொடுத்தால் வேலைக்கு ஏற்பாடு செய்வதாகவும் அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். இதற்கு அவரது மனைவி அன்னு பாஜ்பேயி உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.
இவர்களை நம்பி பிரசிளா, விஜயகுமார், ராஜலட்சுமி ஆகியோர் மொத்தமாக 20 சவரன் தங்க நகைகளையும், 5 லட்சம் ரூபாய் பணத்தையும் அளித்துள்ளனர். பணத்தை பெற்றுகொண்ட ரோஹித்- அன்னு தம்பதி குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டதாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.