‘சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த வேண்டும்’ – மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

பெருமழை, புயல் போன்ற சிவப்பு எச்சரிக்கை சூழ்நிலைகளை முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பெருமழை குறித்த அறிவிப்புகளை உரிய நேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வழங்க இயலாத நிலை உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 30ஆம் தேதி சென்னையில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாகவும், ஆனால், மிக அதிக கனமழை பெய்து பல பகுதிகள் மூழ்கியதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மழை குறித்து உரிய நேரத்தில் எச்சரிக்காததால், முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை அடிக்கடி ஏற்படுவதாகவும், இதனால், இயல்பு வாழ்க்கை மற்றும் மருத்துவ சேவைகள் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டு உயிர், உடைமை இழப்பு ஏற்படுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற நிகழ்வுகள் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தொழில்நுட்பத்தை செம்மைப்படுத்துவதில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டும் என்பதை சுட்டிகாட்டுவதாக அந்த கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 2 =