
சென்னையை தொடர்ந்து எலக்ட்ரிக்கள் பேருந்து சேவை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என போக்குவரத்துதுறை அமைச்சர் புதுக்கோட்டையில் தெரிவித்தார்.
நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் நடக்க உள்ள மாநில அளவிலான இளையோர் தடகள போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யும் போட்டி இன்று மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது,
இதனை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் டாக்டர் சலீம்,செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறுகையில்:

சென்னை மாநரகத்தில் முதற்கட்டகமாக 100 எலக்ட்ரிக் பேருந்துகளை பரிச்சாத்த முயற்சியாக இயக்க நடவடிக்கை எடுக்கட்டு வருகிறது. அடுத்தடுத்த கட்டமாக தமிழக முழுவதும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள 685 காலி பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் பின்னர் அடுத்தபடியாக அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் புதிய பேருந்துகள் வாங்கப்படாததால் தற்போது பேருந்து சேவையை சீர் செய்து வருகிறோம்.
புதுமை பெண் திட்டத்தால் அரசு பள்ளிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பேருந்துகளிலும் கூட்டம் அதிகரித்துள்ளது. கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஓய்வூதியதாரர்களுக்கு பண பலன்களை வழங்குவதற்காக தமிழக முதல்வர் ரூ.1500 கோடி நிதி வழங்கி உள்ளார். அதனை கொண்டு ஓய்வூதியதாரர்களுக்கு பண பலன் உள்ளிட்ட நிதிகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் 4,5 மாதங்கள் மட்டுமே பாக்கி உள்ளது விரைவில் பண பலன்கள் வழங்கப்படும். 4000 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் திறக்கப்பட்டு விட்டது இன்னும் மூன்று, நான்கு மாதத்திற்குள் 4000 புதிய பேருந்துகள்,தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும்.
எல்லா பேருந்துகளையும் நிறமாற்ற நாங்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை,புறநகர் பேருந்துகளை மட்டுமே நிறம் மாற்றுகிறோம் புறநகர் பேருந்தில் சீட் எண்ணிக்கை 5 குறைக்கப்பட்டுள்ளது, உடல் பருமனாக உள்ளவர்கள் பயணிக்கும் வகையில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்பதை நீண்ட கால பிரச்சனை அது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அடித்தள சட்டம் சிறப்பாக உள்ள பேருந்துகளில் 1500 பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டு அதனை புதிதாக கூடு கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகரத்தில் ஓடும் 2500 பேருந்துகளில் நிர்பயா திட்டத்தின் கீழ் சிசிடிவி கேமராக்கள் முழுவதுமாக பொருத்தப்பட்டு விட்டது தமிழக முழுவதும் பேருந்துகளில் படிப்படியாக சிசிடிவி கேமரா பொருத்தும் பணி விரிவுபடுத்தப்படும் உள்ளது என்று சிவசங்கர் கூறினார்.