சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உலக குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் அருணோதயா குழந்தைகள் சங்கக் கூட்டமைப்பு சார்பாக உலக குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் மற்றும் அருணோதயா குழந்தைகள் சங்க மாநாடு, குழந்தைகள் விரும்பும் வன்முறையற்ற மகிழ்ச்சியான உலகம் என்கிற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி யு. கணேசன் மற்றும் காசிமேடு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பிரான்வின் டேனி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடையே உரையாற்றினர். இந்நிகழ்வில், குழந்தைகள் விளையாட்டுகள், கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், கனவுகள் நினைவாகும் பயணம் ஆவணப்படம் வெளியீடு, வீதியோர குழந்தைகள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற கருணாலயா பெண் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி யு. கணேசன் பேசுகையில், தமிழக முதல்வர் பள்ளி மாணவ, மாணவியருக்கு பல எண்ணற்ற நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். சமீபத்தில் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் போன்ற பல எண்ணற்ற திட்டங்களை தொடங்கி மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த உலக குழந்தைகள் தினத்தில் முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதில், ஏராளமான மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =