சென்னை பல்கலை கேள்வித்தாள் குளறுபடி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் பொன்முடி

சென்னை பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளில் இன்று (நவ.18) 2ம் ஆண்டு மாணவர்களுக்கான 3வது செமஸ்டர் தமிழ் பாட தேர்வு நடந்தது. இந்த தேர்வை ஏராளமான மாணவர்கள் எழுதச்சென்றனர். காலை தேர்வு தொடங்கியதும் மாணவ, மாணவிகளுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. அதை வாங்கி பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தாங்கள் படித்த வினாக்கள் எதுவும் வரவில்லையே என அவர்கள் குழப்பம் அடைந்தனர். இதுபற்றி மாணவர்கள் தேர்வு அறைக்கு வந்த பேராசிரியரிடம் கூறினர். அப்போதுதான் வினாத்தாள் மாறி வழங்கப்பட்ட விவரம் தெரிய வந்தது. 3-வது செமஸ்டர் தமிழ் வினாத்தாளுக்கு பதில் கடந்தாண்டு நடந்த 4-வது செமஸ்டர் வினாத்தாள் மாணவர்களுக்கு வினியோகிக்கபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இன்று நடைபெற இருந்த தமிழ் பாட தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்தது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தமிழ் தேர்வில் கடந்தாண்டு வழங்கப்பட்ட வினாத்தாளை இன்றைய தேர்வுக்கு வழங்கி உள்ளனர். இது தெரியவந்ததும் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கான உரிய முறையில் தேர்வு நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 7