சென்னை தாம்பரத்தை மாநகராட்சியாக அமைப்பதற்கு அரசாணை வெளியீடு: தமிழகஅரசு..!

தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக அமைப்பதற்கு அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் எனவும் , தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்த  தாம்பரம், பல்லவபுரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிகளை இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் தாம்பரம், அதன் அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளை இணைத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது புதிய மாநகராட்சிக்கான எல்லையை வரையறை செய்து, புதிதாக வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு தேவையான அனைத்து ஆவணங்களைத் தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே எல்லை வரையறை செய்து வரைபடம் தயாரிக்கப்பட்டது.

இந்நிலையில் சிட்லபாக்கம்,மாடம்பாக்கம்,பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை, திருநீர்மலை பேரூராட்சிகளை தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்க ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மாநகராட்சியின் பரப்பளவு 87.64 ச.கி.மீ, மக்கள்தொகை 9,60,887 ஆக இருக்கும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 1 =