சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேசபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விஜய கணபதி ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகும், விநாயகர் சதுர்த்தி நன்னாளில் அஸ்டபந்தன மகாகும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவையோட்டி அபிசேக ஆராதனைகள், பூஜைகள் வேத மந்திரங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்களின் வாழ்த்து கோஷங்களுக்கு மத்தியில் கோபுரத்தின் உச்சியில் உள்ள கும்ப கலசங்களில் புனித நீர் உற்றப்பட்டு பிறகு பக்தர்களின் மேல் தெளித்தனர்.
ஆலய அறங்காவலர் பி.இராஜாராம், தலைவர் எம்.ஆர்.கார்மேகம், செயலாளர் மீனா கே.சேகர், துணைத்தலைவர், இ.ஜெகநாதன்,பொருளாளர் என்.திருநாவுக்கரசு, இணைச்செயலாளர் கே.பூபதி, துணைத் தலைவர் எஸ்.குமார் மேலும் ஆலய நிர்வாகிகள், கமலகண்ணன், லட்சுமண் சிங், சுதாகர், மணிகண்டன் மற்றும் திமுக 183வது வட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஏ.ஜி.எஸ்.ரவி இவர்கள் ஒன்றிணைந்து விழாவை சிறப்பாக செய்து இருந்தனர். இந்நிகழ்ச்சியில் 500 கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.