சென்னை : உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை – போலீசார் தீவிர விசாரணை

சென்னை, வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கு சத்தியநாராயணன்(26), சூரியநாராயணன்(24) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் தம்பி சூரியநாராயணனுக்கு மட்டும் திருமணமாகி விட்டது. ஆனால் அண்ணன் சத்தியநாராயணனுக்கு திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் சத்யநாராயணன் திருநின்றவூரில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கிக் கொண்டு வடபழனியில் உள்ள சங்கர மடத்தின் சமையலராக வேலை செய்து வந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து இன்று விடியற்காலை சத்யநாராயணன் நெமிலிச்சேரி பாலத்தின் மீது சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது காவல்சேரி என்கிற இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, பிறகு மோட்டார் சைக்கிளிலிருந்து பெட்ரோலை பிடித்து உடலின் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டுள்ளார். மேலும் தீ பிடித்துக் கொண்டு எரியும் போது பாலத்தின் மீதிருந்து கீழே குதித்துள்ளார். இதனால் படுகாயமுற்ற அவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வெள்ளவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா தேவி சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தீ வைத்துக் கொண்டு பாலத்தின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 9 =