டாஸ்மாக் குடோனில் மதுபானம் ஏற்றிச்செல்லும் 60-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
பூந்தமல்லி அருகே திருமழிசையில் உள்ள டாஸ்மாக் குடோனில் மதுபானம் ஏற்றிச்செல்லும் 60-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், 300 மதுபான கடைகளுக்கு மதுபான விநியோகம் தடைப்பட்டுள்ளது. லாரிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக நிலுவைத்தொகையை டாஸ்மாக் தராததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக திருவள்ளூர், காஞ்சி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான விநியோகம் தடைபட்டுள்ளது. இதுகுறித்து அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மதுக்கடைகளுக்கு மதுபானம் செல்வதற்கும், டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை விரைந்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.