
சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வீடுதேடி வரும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசிகள் அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கொரோனா தடுப்பூசி செலுத்த விரும்பபும் மூத்த குடிமக்கள் 044-2538 4520, 044-4612 2300 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.