சென்னையில் 76ம் ஆண்டு காவல்துறை அதிகாரிகளின் “ரீ யூனியன்” சங்கமம் விழா

தமிழக காவல்துறையின் 1976ம் ஆண்டு பேட்ச் தமிழக மற்றும் புதுச்சேரி காவல் உதவி ஆய்வாளர்களின் 47 ஆம் ஆண்டு குடும்ப சங்கம விழா சென்னை அசோக் நகர் காவல் பயிற்சி கல்லூரியில் நடந்தது.

விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் காவல் துறை அதிகாரிகள் ஆர்.நடராஜ், ஜி.திலகவதி, ப.வனிதா, எம்.ஜெயராமன், வி.நாராயணசாமி, எஸ்.ரத்தின சபாபதி பங்கேற்று கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினர். விழாவில் பொருளாளர் முன்னாள் கூடுதல் துணை கமிஷனர் தயாநிதியின் 10 வயது பேத்தி பிரபஞ்சனா ஸ்ரீநிவாஸ் அழகான நீண்ட ஆங்கில கதைகளை சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவரின் தங்கை நிரஞ்சனா ஸ்ரீநிவாஸ் பொன்னியின் செல்வன் திரைப்பட பாடலை பாடி அனைவரையும் மகிழ வைத்தார். சிறுவன் முகுந்தின் நடனம் நடைபெற்றது.

விழாவில், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் தங்கள் காவல் பயிற்சியின் போது அடைந்த பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து பேசியனர். முன்னாள் ஏ.டி.எஸ்.பி., நயினார் முகமது குழுவினரின் இன்னிசை நடைபெற்றது. அனைத்தையும் பாலு துணைவியார் கலைச்செல்வி தொகுத்து வழங்கினார். அசோக்குமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பொருளாளர் தயாநிதி, செயலாளர் மோகன், மற்றும் சங்க பொருளாளர் தாமஸ் செய்திருந்தனர். விழாவில் 200க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் குடும்பத்தினருடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 6 = 1