சென்னையில் மக்கள் ஆணையம் மிஸ்டர் விருது வழங்கும் விழா

சென்னை அமைந்தகரை சமுதாய நலக் கூடத்தில் மக்கள் ஆணையம் மிஸ்டர் விருது வழங்கும் விழா நடைபெற்றது, மக்கள் ஆணையம் நிறுவனர் & ஆசிரியர் முத்தையா தலைமை தாங்கினார். அம்மு முத்தையா குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மெட்ராஸ் ஹைகோர்ட் ஜட்ஜ் டாக்டர் டி.என். வள்ளிநாயகம் கலந்துகொண்டு சிறந்த சமூக சேவைக்கான விருதினை மதுரை மாநகர் வடக்கு மாவட்டத் தலைவர் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் செல்வகுமார்க்கு வழங்கினார்.  உடன் மக்கள் சட்ட உரிமை கழகம் நிறுவனர் தலைவர் ஜெயபாலன், டாக்டர் சிவக்குமார், டாக்டர் வாசுகி சுப்ரமணியன், சின்னத்திரை நாயகர் மற்றும் திரைப்பட நடிகர் மகாநதி சங்கர் ,ஜூபிடர் ரவி, வை.பாண்டிதுரை,  சிங்க தமிழச்சி, மூத்த பத்திரிகையாளர் சீனிவாசராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

91 − 85 =