சென்னையில் கொசு ஒழிப்பு பணி தீவிரம் – ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது.

டெங்கு தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளோம். கொசு நல்ல தண்ணீரில் முட்டையிடும் போது 3 நாட்களுக்குள் புழுக்களாக மாறி விடும். அது 8 நாட்களில் கியூபாவாக மாறி விடும். 21 நாட்களுக்குள் லட்சக்கணக்கான முட்டைகள் புழுக்களாக மாறி லட்சக்கணக்கில் கொசுக்கள் வருகிறது. அதனால்தான் பன்முக நடவடிக்கையாக சுகாதாரத்துறை வீட்டுக்கு வீடு சென்று பார்வையிட்டு கொசு உற்பத்தியாவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கொசு ஒழிப்பு பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. சாக்கடை, குப்பையில் இதர நோய் வருவது போல் வீட்டுக்கு உள்ளேயே நல்ல தண்ணீரில் டெங்கு கொசு இருக்கும். அதே போல் கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதிகளிலும் டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. அவற்றை பார்வையிட்டு கொசு ஒழிப்பு பணியில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே வீட்டிற்குள் டெங்கு கொசு உற்பத்தியாவதை மக்களும் தடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.