சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் மஸ்கட், குவைத், புனே விமானங்கள் பெங்களூரு, ஹைராபாத்துக்கு திருப்பிவிடப்பட்டன
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. நேற்று காலை மஸ்கட், குவைத், புனே ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு வந்த விமானங்கள் ஹைதராபாத் பெங்களூரூ ஆகிய இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, மலேசியா ஆகிய விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. இதேபோல், சென்னையில் இருந்து புறப்படும் ஹைதராபாத், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, மதுரை, மும்பை உள்ளிட்ட 8 விமானங்கள் சுமார் 30 நிமிட நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.