உயர் ரத்த அழுத்த பராமரிப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை கிளாரியன் ஹோட்டலில் நடைபெற்றது.
சென்னையில் உயர் ரத்த அழுத்த பராமரிப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்து ஆலோசிக்க சிட்டிசன் கன்ஸ்யூமர் & சிவிக் ஆக்சன் குரூப் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் குழு கலந்து கொண்டனர். இதில் பேசிய மருத்துவர் மகேஸ்வரி. உலக இதயம் அறக்கட்டளை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உயர் ரத்த அழுத்தத்தின் பரவலான அதிகரிப்பு ஒரு கவனக்குரிய விஷயமாகும். இதை ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட குறைந்தபட்ச நோயாளிகள் கருவிகளைக் கொண்டு கண்டறியக்கூடிய ஒரு நிலையில் இருக்கும்போது இந்தியாவில் பாதிக்கப்படக்கூடிய பெரும்பாலான மக்கள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் வாழ்கின்றனர் எனக் கூறினார்.
இந்தியாவில் பரவலாக உள்ள மற்ற தொற்று நோய்களுடன் மற்றும் தொற்றாத நோய்களோடு ஒப்பிடும் போது உயர் ரத்த அழுத்த நோய்களுக்கான சிகிச்சை செலவுகள் குறைவு. இந்தியாவில் மட்டும் 200 மில்லியனக்கு அதிகமான மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருபது மில்லியனுக்கு அதிகமான மக்கள் அதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர்.
நிகழ்வில் மருத்துவர்கள் மகேஸ்வரி, ரஷ்மி, விஜய் சக்கரவர்த்தி மற்றும் பல மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் கலந்து கொண்டனர்.