சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.37,440க்கு விற்பனை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.37,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்றைய தினம் மக்களை மேலும் மகிழ்விக்கும் வகையில் தங்கத்தின் விலை மீண்டும் சரிந்துள்ளது. அதாவது  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.37,440-க்கும், கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.4,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து ரூ.61.10-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் தங்கத்தின் விலை சரிந்திருப்பது  மக்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 11 = 14