செந்தூரான் பொறியியல் கல்லூரியில்  15-ஆம் ஆண்டு விளையாட்டு விழா

????????????????????????????????????

புதுக்கோட்டை மாவட்டம், லெணா விலக்கில் அமைந்துள்ள செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 15-ஆம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். கல்லூரியின் முதன்மைச் செயல் அதிகாரி கார்த்திக், தேசிய கொடியினையும், கல்லூரியின் முதல்வர் கணேஷ்பாபு ஒலிம்பிக் கொடியினையும், கல்லூரியின் உடற்கல்வித்துறை ஆசிரியர் அன்பரசன் கல்லூரியின் கொடியினையும்,  ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர். மாணவர்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி வந்து ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார்.

கல்லூரியின் கணினி அறிவியல் துறையின்  மாணவி சப்ரின் ரஹ்மத் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி செந்தில்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

விளையாட்டில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கிரீன் ஹவுஸ் அணியினர் வென்றனர். மாணவர்களுக்கான தனித்துவ சாம்பியன் பட்டத்தை சந்தோஷ்-ம் மாணவிகளுக்கான தனித்துவ சாம்பியன் பட்டத்தை திவ்யதர்ஷினியும் வென்றனர்.

விழாவில் கல்லூரியின் துணைத் தலைவர் நடராஜன், மேலாண்மை இயக்குநர் வயிரவன் மற்றும் திருச்செந்தூர் முருகன் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் ராமையா, தியாகராஜன், முத்துராமன், யோகநாதன், கணேசன், மீனாவயிரவன், அம்பிகாபதி, மற்றும் செந்தூரான் பொறியியல் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவின் நிறைவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் கல்லூரியின் முதலாமாண்டு மாணவி காயத்ரி நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 24 = 33