செந்துறை கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தது

செந்துறை கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கு கேடயம் வழங்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், செந்துறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், நாள் ஒன்றுக்கு 24 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளது.

மாவட்ட அளவில் சிறந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கான முதலிடம் பெற்ற, செந்துறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு, முதல் பரிசுக்கான கேடயம் வழங்கப்பட்டுள்ளது.

அரியலூரில் நடைபெற்ற கூட்டுறவு சங்க வார நிறைவு விழாவில், இதற்கான பரிசினை சங்க செயலாளர் கொளஞ்சிநாதனிடம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரமண சரஸ்வதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 1