செந்துறையில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுக்கா அலுவலகம் முன்பு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் செந்துறை ஒன்றிய செயலாளர் கு அர்ச்சுனன் தலைமை வகித்தார். செந்துறை தாலுக்கா, ஆலத்தியூர், ஆதனக்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்பட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில குழு உறுப்பினர் வாலண்டினா சிறப்புரையாற்றினார்.
மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிவேல், மருவத்தூர் கந்தசாமி, அம்பிகா, மாவட்ட குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் திரிசங்கு, மகேந்திரன், இளையபெருமாள், ராமசாமி, சரவணன் குமார், பரமசிவம், மீனா, பானுமதி, தனம், பல்லவி, அபிராமி, அகிலா, மகேஸ்வரி, மீனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.