செந்துறையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை  போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்  துவக்கி வைத்தார்

செந்துறையில் தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாமை போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்  போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில்  நடைபெற்றது.

இம்முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா,  அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலையில் நடைபெற்றது. 162 தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்ற இச்சிறப்பு வேலைவாய்ப்பு முகாமினை துவக்கி வைத்து, இம்முகாமில் வேலை வாய்ப்பு பெற்ற 297 இளைஞர்களுக்கு பணியமர்வு ஆணை வழங்கி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசினார்.

இம்முகாமில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அ.கலைச்செல்வன், செந்துறை ஊராட்சி மன்றத் தலைவர் செல்லம் கடம்பன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மூ.வினோத்குமார். திமுக ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், எழில் மாறன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.