செந்துரான் பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் மாநில குத்துச்சண்டை போட்டியில் இரண்டாம் இடம்பிடித்து சாதனை

செந்துரான் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைப்பியல் துறையில் இரண்டாமாண்டு பயிலும் ராகேஷ் என்கின்ற மாணவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மேற்படி மாணவன் சென்னையில் நடைபெற்ற “மாநில அளவிலான குத்துச்சண்டை  போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக பங்கேற்றார் (சென்னை – நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது). இப்போட்டியில்  தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல வீரர்கள் கலந்து கொண்டனர். ராகேஷ், 90 கிலோக்கு கூடுதலான எடை பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று கல்லூரிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.மேலும் இம்மாணவன் தேசிய அளவில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

                இம்மாணவரது சாதனையை கௌரவிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில் கல்லூரியின் முதல்வர் செல்வராஜ் தலைமை வகித்து பேசினார். கல்லூரியின் தலைவர் செல்வராஜ்,   நிர்வாக இயக்குநர் சு.வைரவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதன்மைச்செயல் அலுவலர் கார்த்திக் தமது வாழ்த்துறையில் போட்டிகளில் தன்னம்பிக்கையோடு கலந்துகொண்டு சாதனைகள் நிகழ்த்த வேண்டுமென கேட்டு கொண்டார். இறுதியாக போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவனுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் உபதலைவர் நடராஜன்,  செயலர் தியாகராஜன், தாளாளர் ராமையா, பொருளாளர் மு.முத்துராமன் ,செயல் இயக்குநர் ஆ.பாண்டிகிருஸ்ணன் ,மனிதவள இயக்குநர்   ஏ.மீனாவைரவன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இறுதியாக உடற்கல்வி இயக்குநர் பாலமுருகன்  நன்றியுரை வழங்கினார்.