செங்குன்றத்தில் நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான குடும்ப அட்டை, ஆதார் அட்டையை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

செங்குன்றத்தில்  நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் மூன்றாம் பாலினத்திற்கு  குடும்ப அட்டை, ஆதார் அட்டை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் காசநோய் குறித்து விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில்  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில்   மூன்றாம் பாலினத்தவர் பல்வேறு கோரிக்கை வைத்தனர் குறிப்பாக  நிரந்தரமான பசுமை வீடு வழங்க வேண்டும் அரசால் வழங்கப்படும் சலுகைகள் எங்களுக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்று கூறினர் . பின்னர் பல்வேறு தரப்பினர் கோரிக்கை மனுவை கொடுத்தனர். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இந்தியன் நேஷனல் காங்கிரஸ்  மாநில செயலாளர் ஆர்.சாந்தகுமார் செங்குன்றம் நாரவாரிகுப்பத்தில் அமைந்துள்ள இந்த சமுதாயக் கூடத்தில் மேல் தளம் அமைத்தால் ஏழை எளிய மக்களுக்கு நடுத்தர மக்களுக்கும்  மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மனு கொடுத்தார். இதில் பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன். செங்குன்றம் வருவாய் துறை ஆய்வாளர்  ஸ்டீபன் ராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்