செங்கல்பட்டு கல்குளம் ஊராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலம் மீட்பு

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், இலத்தூர் ஒன்றியம், கல்குளம் ஊராட்சி, மடவிளாகம் பகுதியில் பழமையான திருகாமேஸ்வரர் கோகிலாம்பிகை என்ற மிகவும் வரலாற்று சிறப்புமிக்க கோவில் உள்ளது. அந்தக் கோயிலுக்கு சொந்தமாக சுமார் 750 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தில் ஒரு பகுதியாக பூந்தோட்டம் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளித்தனர்.

அந்த புகார் மனு மீது விசாரணை நடத்தும் படி, மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியருக்கு குறிப்பாணை அனுப்பியும் காலதாமதம் ஏற்பட்டது. பிறகு பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி கல்குளம் ஊராட்சி மன்ற தலைவர் மலர் ரமேஷிடம் முறையிட்டு அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில், அறநிலையத்துறை அதிகாரி, தாசில்தார், வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி கோவில் நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று மறியலில் ஈடுபட்டனர். பிறகு அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து நீண்ட நேரத்திற்கு பிறகு காவல்துறை ஒத்துழைப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றம் செய்து அந்த இடத்தில் எச்சரிக்கை பலகை வைத்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கல்குளம் ஊராட்சி மக்கள், அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும், ஊராட்சி மன்ற தலைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

66 − = 60