செங்கல்பட்டு இலத்தூர் ஊராட்சியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், இலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரபோகம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமை இலத்தூர் ஒன்றிய குழு தலைவர் சுபலட்சுமி கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இலத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, இலத்தூர் ஒன்றிய குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம் ஒன்றிய கவுன்சிலர், பர்வதம்,  வரதன், வீரபோகம் ஊராட்சி மன்ற தலைவர் அங்கமுத்து மற்றும் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

இலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கால்நடை வளர்ப்போர் முகாமில் பங்கேற்று கால்நடைகளுக்கு சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

51 + = 61