சூரியூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாட்டின் உரிமையாளர் பலி

பொங்கல் பண்டிகையையொட்டி அரசின் வழிகாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு திருச்சி மாவட்டம் சூலூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாட்டின் உரிமையாளர் பரிதாபமாக பலியானார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஸ்ரீநற்கடல் கருப்பணசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் தினத்தன்று நடக்கும் ஜல்லிக்கட்டு, இன்று அரசு வழிகாட்டுதல்படி துவங்கியது. கலெக்டர் சிவராசு தலைமையில் திருச்சி எஸ்பி சுஜித்குமார், கோட்டாட்சியர் தவச்செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தார். 400 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு பணியில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு காளையை கொண்டு வந்த போது, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மாட்டின் உரிமையாளர் மீனாட்சி சுந்தரம் (30) என்பவரை மாடு முட்டியது. அதில் பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 4