சுவீடன் நாட்டில் சாதனை படைத்த கிராண்ட் மாஸ்டருக்கு காரைக்குடியில் வரவேற்பு

சதுரங்க விளையாட்டில் உலக சாதனை படைத்த காரைக்குடி தனியார் பள்ளி மாணவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 11 ஆம் வகுப்பு மாணவரான பிரனேஷ். சுவீடன் நாட்டில் நடந்த சதுரங்க விளையாட்டில் உலக சாதனை படைத்தார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சென்னை திரும்பிய அவரை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.பின்னர் சொந்த ஊரான காரைக்குடிக்கு வருகை தந்த அவரை பேருந்து நிலையத்தில் மாணவர் படிக்கும் பள்ளியான வித்யா கிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பள்ளி குழு தலைவர் கிருஷ்ணன், தாளாளர் ஆர்.சுவாமிநாதன், பொருளாளர் முகமது மீரா, பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் உள்ளிட்டோர் மலர் கொத்து கொடுத்தும் பொன்னாடை அணிவித்தும்  சிறப்பான வரவேற்பு அளித்தனர். நிகழ்வில் மாணவ, மாணவியர், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள்,செய்தியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக காரைக்குடி வரும் முன்பாக  கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தையும் மாணவர் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 11 = 19