சுற்றுலாப்பயணிகள் வாரஇறுதியில் ஏற்காடு செல்ல தடை

சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிவாரத்திலேயே வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுவதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்தோடு திரும்பினர்.

ஏற்காட்டில் கடந்த 2 வார காலமாக விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்த நிலையில் கொரோனா  பரவலை தடுக்கும் விதமாக, வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் ஏற்காடு செல்ல முற்றிலும் தடைவிதித்து சேலம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

வார இறுதி நாட்களை தவிர்த்து பிற நாட்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று, RTPCR பரிசோதனை முடிவு சான்று வைத்திருத்தல் அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். ஏற்காட்டை சேர்ந்தவர்கள், ஏற்காட்டை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள், உரிய ஆவணங்களை காட்டியபிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

Similar Articles

Comments

Advertismentspot_img

Instagram

Most Popular

x
error: Content is protected !!
%d bloggers like this: