சும்மா இருப்பது அவ்வளவு சுலபமா?: ஐரோப்பியாவில் நீண்ட நேரம் சும்மாவே இருப்பவர்களுக்கான போட்டியில் 470 மணி நேரம் கடந்து சாதனை படைப்பவருக்கு ரூ.88,000 பரிசு

சும்மா இருப்பது அவ்வளவு சுலபம் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் நீண்ட நேரம் சும்மா இருக்கும் சோம்பேறி குடிமகன் என்ற படத்துக்கான போட்டி ஐரோப்பிய நாடு ஒன்றில் நடந்து வருகிறது.

உண்மையிலேயே சும்மா இருப்பது சுலபம் அல்ல என்பதை விளக்கும் வகையில் ஒரு நாட்டில் போட்டியே நடந்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நாட்டு மக்கள் பெரும்பாலும் சோம்பேறிகளாக தான் இருப்பார்கள் என்ற கருத்து உண்டு. இந்த கருத்துக்கு பதிலடியாக சும்மா இருப்பது சுலபம் அல்ல என்பதை காட்ட 12 ஆண்டுகளுக்கு முன்னர் விளையாட்டாக ஒரு போட்டி தொடங்கப்பட்டது. யார் நீண்ட நேரம் சும்மாவே இருக்கிறார்களோ அவர்களுக்கு சோம்பேறி குடிமகன் என்ற பட்டம் வழங்கப்படும்.

117 மணி நேரம் ஒரே இடத்தில் படுத்து இருந்தது தான் இந்த போட்டியின் சாதனையாக இருந்தது. ஆனால், நடப்பாண்டு இந்த போட்டி 20 நாட்களை தாண்டி நடைபெற்று வருகிறது. சும்மா இருக்கணும் அவ்வளவுதானே என கேட்க எளிதாக இருக்கலாம். ஆனால் இதில் கலந்து கொள்பவர்கள் ஒரே இடத்தில் படுத்து இருக்க வேண்டும். கொஞ்சமும் முதுகினை நிமிர்த்தி அமர்ந்து விடக்கூடாது. எழுந்து நின்று விடவும் கூடாது. படுத்த நிலையிலேயே அவர்கள் செல்போன், லேப்டாப் பயன்படுத்தவும், புத்தகம் படிக்கவும் அனுமதி உண்டு.

8 மணி நேரத்திற்கு ஒரு முறை கழிவறை பயன்படுத்த 10 நிமிடங்கள் வழங்கப்படும். இந்த விதி முறைகளை மீறுபவர்கள் அந்த வினாடியே ஆட்டத்தில் இருந்து விளக்கப்படுவர். நீண்ட நேரம் படுத்து இருப்பதால் உடல்வலி ஏற்படும். ஆனால், இதனையெல்லாம் மீறி யார் சும்மாவே இருக்கிறார்களோ அவர்களுக்கு பட்டமும் இந்திய மதிப்பில் ரூ.88,000-ம் பரிசுத்தொகையும் வழங்கப்படும். 21 பேருடன் தொடங்கிய போட்டி 470 மணி நேரத்தை தாண்டி 7 பேருடன் தொடர்வது குறிப்பிடத்தக்கது.