சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கல்

சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 50ம் ஆண்டு பொன்விழா முன்னிட்டு பல்வேறு நலதிட்டப்பணிகள் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு நிகழ்வாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் 50 பேருக்கு தலா 2,000 ரூபாய் மதிப்பிலான அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் போர்வை ஆகியவற்றை பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன், செயலர் அனிதா வழங்கினர். இதில், ஆசிரியர் கோவி நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், குட் சமாரிட்டன் கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் பிரவீண் வசந்த், அனுஷா பிரவீண், அலெக்சாண்டர், ரினிஷா ஜோன், விவேகானந்தா பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகரசிங், துணை முதல்வர் சரோஜா தாமோதரன் ஆகியோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

24 + = 27