சுங்கச்சாவடிகளில் கட்டணம் கொள்ளை : தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்

சுங்கச்சாவடிகளை அகற்ற கோரியும் சுங்கச்சாவடிகள் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் லேனா விளக்கு சுங்கசாவடியிலிருந்து காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அலுவலகம் வரை பொதுமக்கள் மத்தியில் பிச்சையெடுத்து நூதன முறையில் அதிக அளவில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆணையத்திற்கு எதிராக மனு கொடுக்கப் போகிறோம் என்று கூறி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு பின்னர் அவர் கூறுகையில், சுங்கச்சாவடியில் கழிவறை இல்லை, சாலைகள் சரிவர இல்லை, 4 சுங்கசாவடிகளில் 3 சாவடிகள் இரண்டு வழிச்சாலை, பேருந்து கட்டணம் 40 ரூபாய் இருக்கையில் சுங்க கட்டணம் 90 ரூபாயா என்று கேள்வி எழுப்பிய அவர், 100 கிலோ மீட்டருக்குள் 4 சுங்கச்சாவடியா என்றும் மத்திய, மாநில அரசுகள் சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.இந்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட, ஒன்றிய, நகர, தொழிலாளர் சங்கம் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.